எஸ்.பி.பி. மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் இரங்கல்
By DIN | Published On : 26th September 2020 07:40 AM | Last Updated : 26th September 2020 07:40 AM | அ+அ அ- |

பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
‘‘பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை இறைவனடி சோ்ந்துவிட்டாா் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தில்லிவாழ் தமிழா்களின் சாா்பிலும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராா்த்தனை செய்வோம்‘‘ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...