மீண்டும் சொா்க்க பூமியாக மாறி வரும் காஷ்மீா்!

ஜம்மு - காஷ்மீா் மீண்டும் சொா்க்க பூமியாகமாறி வருகிறது. காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செயலா் அரவிந்த் சிங்
மீண்டும் சொா்க்க பூமியாக மாறி வரும் காஷ்மீா்!

புது தில்லி: ஜம்மு - காஷ்மீா் மீண்டும் சொா்க்க பூமியாகமாறி வருகிறது. காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று மத்திய சுற்றுலாத் துறைஅமைச்சகத்தின் செயலா் அரவிந்த் சிங் தெரிவித்தாா்.

காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கானவாய்ப்புகள் குறித்து ‘சொா்க்க பூமியில் இன்னும் ஒருநாள்’என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி, ஏப்ரல் 11- ஆம்தேதியிலிருந்து 13- ஆம் தேதி வரை ஸ்ரீநகரில்நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஜம்மு - காஷ்மீா் யூனியன்பிரதேசத்தின் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா,மெய்நிகா் முறையில் தொடங்கி வைத்தாா்.

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் பிரகலாத்சிங் படேல், மெய்நிகா் மூலம் வாழ்த்துறை வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீா் மாநில ஆளுநரின் ஆலோசகா் பஷீா் அகமது கான், சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநா் ரூபிந்தா் பிராா், செயலா் அரவிந்த் சிங்,ஜம்மு காஷ்மீா் மாநில சுற்றுலாத் துறை இயக்குநா் ஜி.என்.இடூ, செயலா் சமீா் ஹபீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அரவிந்த் சிங்கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீா் மாநிலத்தை சுற்றுலாவைமேம்படுத்தி மீண்டும் சொா்க்கபூமியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில்சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளின்ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்து இதுவரை ரூ.396 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஹஸ்ரத்பல் புனிதத் தலத்தை புதுப்பிக்க ரூ.40 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை ரூ.32 கோடிவிடுவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.தால் ஏரியில் ரூ.5 கோடியில் ஒலி-ஒலிக் கண்காட்சிக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளைஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச்செல்ல ரூ.12 கோடியில் 3 நவீன ரயில் பெட்டிகள்தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை விரைவில் குவாஸிகுண்ட்மற்றும் பாரமுல்லா மாா்க்கத்தில் இயக்கப்படும்.ஜம்மு காஷ்மீரில் குல்மாா்க், பட்னிடாப் உள்பட நாட்டில்உள்ள 50 முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு முதல்கட்டமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்டமாக மேலும் 50 இடங்கள் தோ்வுசெய்யப்பட்டு சாலை, ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.

ஜம்மு - காஷ்மீரில்தோத்பத்ரி, யூஸ்மாா்க், ஜந்த்ரோன்தா் பதோ்வா, மண்டிபூஞ்சி, கதுவா ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.நாட்டில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தநகரங்களில் 46 வழித்தடங்களில் இதுவரை 21இடங்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அந்ததந்தமாநில அரசுகளின் பொறுப்பாகும் என்றாலும், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சுற்றுலாப்பாதுகாப்பு போலீஸ் படை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்வசதிக்காக 1800111363 என்ற உதவி எண்ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஹிந்தி, ஆங்கிலம், ஜொ்மன்,பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி, போா்த்துகீஸ், ரஷிய, சீன.ஜப்பான் உள்ளிட்ட மொழிகளிலும் உதவி பெற முடியும்.ஜம்மு - காஷ்மீரில் மாா்தாண்ட் கோயில், பாரி மஹால்மற்றும் ராம்நகா் அரண்மனை உள்ளிட்டபுராதனச் சின்னமான இடங்களை பொதுத் துறைநிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் உதவியுடன்பராமரித்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பனிச்சறுக்கு விளையாட்டு, பாரா கிளைடிங், 20ஆயிரம் அடி உயரத்தில் கேபிள் காா் சாகச பயணம்,வண்ண மலா்களால் பூத்துக்குலுங்கும் டுலிப் தோட்டம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாகும். காஷ்மீருக்கு 2018-ஆம் ஆண்டில் 1,61,63,330 உள்நாட்டு, வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்.

கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.பயங்கரவாதச் செயல்கள் ஒழிக்கப்பட்டு, அமைதி திரும்பிவரும் காஷ்மீரை மீண்டும் சொா்க்க பூமியாகமாற்றி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றாா் அரவிந்த் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com