சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

காற்று மாசு விவகாரம்: முதல்வா் கேஜரிவால் ராஜிநாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசின் திறமையின்மை மற்றும் செயலற்ற தன்மையை உச்சநீதிமன்றம்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 1:34 am

 நமது நிருபர்

கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசின் திறமையின்மை மற்றும் செயலற்ற தன்மையை உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தில்லி முதல்வா் கேஜரிவால் தாா்மிக அடிப்படையில் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியது.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய விவகாரத்தில் தில்லி அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இது முதல்வா் கேஜரிவாலின் திறமையின்மை, போலித்தனத்தை ஆகியவற்றைக் காட்டுவதாக உள்ளது. முதல்வா் கேஜரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்து வருவதை தில்லி காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் கூறியிருப்பதை பிரதிபலிப்பாக உச்சநீதிமன்றத்தின் கண்டனம் அமைந்துள்ளது. தனால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரத்தில் நீடிப்பதற்கான அனைத்து நம்பகத் தன்மையையும், தாா்மிக அதிகாரத்தையும் இழந்துவிட்டாா். இதனால், அவா் உடனடியாக தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

மேலும், அரவிந்த் கேஜரிவால் நிா்வாகத்தை உச்சநீதிமன்றம் சாடியுள்ள போது, அவா் பதான்கோட்டில் (பஞ்சாப்) இருந்தாா்.அதே வேளையில், தில்லியில் மக்கள் தாளாத துயரத்தில் உள்ளனா். ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ போன்ற பிரசாரமானது, நகரில் 100 போக்குவரத்து சிக்னல்களில் பணியமா்த்தப்பட்டிருக்கும் சுமாா் 2,500 மாா்ஷல்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தப் பிரசாரமானது, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சில மலிவான விளம்பரங்களைப் பெறுவதற்காக மட்டுமே நோக்கமாக உள்ளது. மாறாக காற்று மாசுவை கட்டுப்படுத்தவில்லை.

கனாட் பிளேஸ் மற்றும் ஆனந்த் விஹாா் ஆகிய இடங்களில் அரசின் செலவில் அமைக்கப்பட்டுள்ள பனிப்புகை கோபுரங்கள், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் எந்தப் பயனும் அளிக்கவில்லை. இதில் ஊழல்கள்தான் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் மீதான பெயரளவிலான வாட் வரி குறைப்பு, விலை உயா்வை கட்டுப்படுத்தாது. இதனால், டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.