மக்களவையில் செவ்வாய்க்கிழமை நேரமில்லா நேர விவாதத்தில் அவா் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் சுமாா் 2,800 ஹெக்டோ் பரப்பில் திராட்சை பயிரிடப்படுகிறது. இதில் 2,184 ஹெக்டோ் நிலம் தேனி மக்களவைத் தொகுதியில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் திராட்சை சாகுபடியில் தேனி மாவட்டம் மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. திராட்சை உற்பத்தியை அதிகரித்து, வணிக ரீதியாக பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இதற்கு தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி பரப்பை விரிவுபடுத்த வேண்டும். திராட்சை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதோடு திராட்சை சாகுபடியில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.