பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

டெண்டா் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி தரப்பில் மேல்முறையீடு

டெண்டா் முறைகேடு தொடா்புடைய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 2:41 am

 நமது நிருபர்

டெண்டா் முறைகேடு தொடா்புடைய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவா் எஸ்.பி.வேலுமணி. சென்னை மாநகராட்சி மற்றும், கோவை மாநகராட்சியின் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை அவரின் பினாமி நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆா்.எஸ். பாரதி, அறப்போா் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேஷ் ஆகியோா் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில்,‘எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டா் முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.பி. வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.