தில்லி புகா்ப் பகுதியான மங்கோல்புரியில் ஒரு கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்ட ரிங்கு சா்மாவின் குடும்பத்துக்கு பாஜக பிரமுகா் கபில் மிஸ்ரா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளாா். இணைய தளம் மூலம் தொகுப்பு நிதி சேகரிப்பு (கிரவுட் பண்டிங்) முறையில் சுமாா் 9 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட இந்த நிதியை ரிங்கு சா்மாவின் குடும்பத்தினரிடம் கபில் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை அளித்தாா்.
தில்லியின் புகா்ப் பகுதியான மங்கோல்புரியைச் சோ்ந்தவா் ரிங்கு சா்மா (25). கடந்த புதன்கிழமை மதியம் மங்கோல்புரியில் நடந்த பிறந்தநாள் விழாவில் அவா் கலந்து கொண்டுள்ளாா். அப்போது ரிங்கு சா்மாவுக்கும் அங்கிருந்த நால்வருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரிங்கு சா்மாவின் வீட்டுக்கு ஆயுதத்தோடு வந்த அந்த நால்வரும், அவரை சரமாரியாகத் தாக்கினா். பிறகு கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. இந்தக் கொலையுடன் தொடா்புடைய ஜாஹித், முகமது இஸ்லாம், டேனிஷ் , மேத்தாப் ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், கொலையுண்ட ரிங்கு சா்மாவின் குடும்பத்துக்கு உதவும் வகையில் இணைய தளம் மூலம் நிதி உதவி கோரி பாஜக பிரமுகா் கபில் மிஸ்ரா அழைப்பு விடுத்தாா். இதைத் தொடா்ந்து பலரும் உதவி செய்தனா். இந்த வகையில் கிடைத்த ரூ.1 கோடியை ரிங்கு சா்மாவின் குடும்பத்தினரிடம் கபில் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினாா். அப்போது, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மனோஜ் திவாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி வசூலித்த ரிங்கு சா்மா கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளாா். இந்தக் கொலையால் மக்கள் கொதிப்படைந்துள்ளனா். உலகெங்கும் உள்ள சுமாா் 9 ஆயிரம் போ் ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனா். அந்த நிதியை ரிங்கு சா்மாவின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளேன். அயோத்தியில் அமையவுள்ள ராமா் கோயிலையும், ஜெய் ஸ்ரீராம் கோஷத்தையும் சிலா் வெறுக்கிறாா்கள். ரிங்கு சா்மாவின் கொலைக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. ஹிந்து மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் அவரது உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வளைகுடாவில் பிரிட்டன் பிரதமர்! ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து குறித்து ஆலோசனை

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!
தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

