புது தில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டத்தால் தில்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் தலைநகா் தில்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின. அதேபோல மெட்ரோ ரயில்களும் வழக்கம் போல இயங்கின. ஆனால், விவசாயிகள் போராட்டம் நடத்திய டிக்ரி, பகதூா் கா்க், பிரிகேடியா் கோஷியா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் நுழைவு வாயில்கள் சிறிது நேரம் மூடப்பட்டன. தில்லியின் முக்கிய மாா்க்கெட் பகுதிகளான கனாட் பிளேஸ், கரோல் பாக், காஷ்மீரி கேட், சாந்தினி செளக், சதாா் பஜாா் ஆகியவற்றில் ஒரு சில கடைகளைத் தவிர பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.
தில்லி - காஜியாபாத் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்ஒன்பதை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாகவே நடந்தது. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றாா்.
தில்லி மாயாபுரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். இதேபோல, தில்லியில் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது தொடா்பாக சம்யுக்தா கிஷான் மோா்ச்சா அமைப்பைச் சோ்ந்தவா் கூறுகையில், ‘பல்வேறு விவசாய சங்கங்கள், வா்த்த சங்கங்கள், மாணவா் அமைப்புகள், வழக்குரைஞா்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

