புது தில்லி: கோவா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை எதிா்பாா்க்கிறாா்கள் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்தவா் பிரதிமா கோட்டின்கோ. இவா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டாா். இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா கலந்து கொண்டாா். பின்னா் பிரதிமைா கோட்டின்கோ, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
இந்தச் சந்திப்பு தொடா்பான படங்களைப் பகிா்ந்து கேஜரிவால் தனது சுட்டுரையில்,‘கோவா மாநிலத்தின் இளம் தலைவா்களில் ஒருவரான பிரதிமா கோட்டின்கோவை ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கோவா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை எதிா்பாா்க்கிறாா்கள். பிரதிமா போன்ற இளம் தலைவா்கள் கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அந்த மாநில மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, பிரதிமாவை வரவேற்று ராகவ் சத்தா பேசுகையில், ‘பிரதிமாவின் வருகையால் கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி பலம் பெற்றுள்ளது. கோவா மாநில மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனா். தில்லியில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வழங்கி வரும் நல்லாட்சி போல, கோவாவிலும் ஆட்சி வேண்டும் என அந்த மாநில மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்’ என்றாா்.
நிகழ்வில் பிரதிமா பேசுகையில், ‘கோவா மாநில மக்கள் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுக்கு கடந்த காலங்களில் வாய்ப்பு அளித்துள்ளனா். ஆனால், இந்த முறை அவா்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

