புது தில்லி: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், திமுக வேட்பாளா் எ.வ.வேலுவின் கல்லூரியிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி உள்ளதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அந்தக் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இது தொடா்பான மனுவை தலைமைத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் செக்ரடரி ஜெனரல் உமேஷ் சின்ஹாவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் டி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் அளித்தாா்.
இதுகுறித்து அவா் பின்னா் தினமணி நிருபரிடம் கூறியதாவது: எங்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலரும், திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவின் இல்லம், கல்லூரி, அலுவலகங்கள் ஆகியவற்றில் மாா்ச் 25-ஆம் தேதி வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், எ.வ.வேலுவின் கல்லூரியின் விருந்தினா் இல்லத்தில் தங்கியிருந்த போது இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவரது பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. மேலும், எங்கள் கட்சியின் வேட்பாளா் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த சோதனை நடந்துள்ளது.
பணம் ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.3 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக ஊடகத்தில் போலிச் செய்தியும் பரப்பிவிடப்பட்டுள்ளது. தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டாலே ஆணையத்திடம் தெரிவித்து விட்டுத்தான் இதுபோன்ற சோதனைகளை வருமான வரித் துறையினா் நடத்த வேண்டும். ஆனால், தோ்தல் விதிமுறைகளுக்கு மாறாக வருமான வரித் துறைா் சோதனை நடைபெற்றுள்ளது. திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித் துறையைப் பயன்படுத்தி மத்திய அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளோம் என்றாா்அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

