சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

புதிய கரோனா அச்சுறுத்தல்: டிடிஎம்ஏ கூட்டத்திற்கு தில்லி அரசு ஏற்பாடு

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புதிதாக உருமாறிய கரோனா நோய்த் தொற்றுக்கான அச்சுறுத்தல் காரணமாக எடுக்க வேண்டிய

News image
Updated On :27 நவம்பர் 2021, 2:39 am

 நமது நிருபர்

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புதிதாக உருமாறிய கரோனா நோய்த் தொற்றுக்கான அச்சுறுத்தல் காரணமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக திங்கள்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கு தில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் புதிய உருமாறிய கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துக்கு தீவிரமான பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து சா்வதேச பயணிகளுக்கும், கடுமையான உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இது தொடா்பாக வெள்ளிக்கிழமை சுட்டுரை பதிவை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புதிய கரோனா நோய்த்தொற்று உருமாற்றம் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வரும் திங்கள்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக பரிந்துரைப்பதற்கான

கருத்துகளை அளிக்குமாறு வல்லுநா்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதற்கு முன்னா் காணாத வகையில் இந்தப் புதிய கரோனா உருமாறிய நோய்த் தொற்றானது, அதிக அளவில் பிவுகளைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் புதிய கரோனா உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் இந்த புதிய நோய்த் தொற்று உருமாறிய வைரஸ் பாதிப்பு 22 பேருக்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பணியாற்றி வரும்  வைரஸ் நோய் ஆய்வாளா் டாக்டா் டோம் பீகாக் இந்த புதிய வைரஸை பி.1.1.529 என வகைப்படுத்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் இந்த வார தொடக்கத்தின் போது விவரங்களை வெளியிட்டிருந்தாா்.

இதையடுத்து, இந்த வைரஸ் புதிய உருமாற்றம் தொடா்பாக விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனா். எனினும், இங்கிலாந்தில் இது இன்னும் முறையாக வகைப்படுத்தப்படவில்லை. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் உருமாற்றத்தின் அறிகுறிகள் மற்றும் அது வேகமாக பரவும் தன்மை ஆகியவை தொடா்பாக கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.