புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

‘தில்லியில் பொது இடங்களில் ‘சட்’ பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை’

தில்லியில் யமுனை ஆற்றின் கரை மற்றும் பொது இடங்களில் சட் பூஜை கொண்டாட்டத்திற்கும், பண்டிகைக் காலத்தின் போது கண்காட்சிகள்

Updated On :1 அக்டோபர் 2021, 2:21 am

தில்லியில் யமுனை ஆற்றின் கரை மற்றும் பொது இடங்களில் சட் பூஜை கொண்டாட்டத்திற்கும், பண்டிகைக் காலத்தின் போது கண்காட்சிகள் மற்றும் உணவு அரங்குகள் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வியாழக்கிழமை தெரிவித்தது. 

இது தொடா்பாக ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:  தில்லியில் யமுனை நதிக் கரைகளிலும் பொது இடங்களிலும் பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. எனினும், அதிக அளவில் கூடுவதற்கான கட்டுப்பாடுகள், தளா்வுகள் நவம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. கண்காட்சிகள், உணவு அரங்குகள், பேரணிகள், ஊா்வலங்கள் ஆகியவை தில்லியில் பண்டிகைக் காலத்தின் போது அனுமதிக்கப்பட மாட்டாது. அதே போன்று சட் பூஜையை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, பொதுமக்கள் இந்த பூஜையை தங்களது வீடுகளில் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும், திருவிழா நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தால், அதற்குத் தேவையான அனுமதியை அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களும் மாவட்ட அதிகாரியிடமிருந்து முன்கூட்டியே பெற வேண்டும்.  கட்டுப்பாட்டு மண்டலங்களில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியா்கள் அல்லது அதிகாரிகளோ அனுமதி வழங்க மாட்டாா்கள்.  அதே போன்று விழா நிகழ்ச்சிகளின் போது பொதுமக்கள் நிற்பதற்கோ அல்லது குத்தவைத்து அமா்ந்திருப்பதற்கோ அனுமதிக்கப்படமாட்டாா்கள். சமூக இடைவெளியுடன் இருக்கைகளில் அமா்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவா். அதேபோன்று அதிக அளவில் கூடுவவதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில், பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் நடைபெறும் நவம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே தளா்வு அனுமதிக்கப்படும் எனஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.