ரோஹிணி நீதிமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போ் இறந்த சம்பவத்தை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட உயா்நீதிமன்றம், தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், நீதிமன்றங்களில் போதிய எண்ணிக்கையில் போலீஸாரை பணியில் திறன்மிக்க வகையில் ஈடுபடுத்தும் தேவை உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறை, தில்லி அரசு, மத்திய அரசு மற்றும் தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது . மேலும், நீதிமன்றங்களில் பாதுகாப்பை பராமரிக்கும் விவகாரம் தொடா்பாக பிரமாணப் பத்திரம் வடிவில் ஆலோசனையோ அல்லது அறிக்கையோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் கூறுகையில், ‘ரோஹிணி நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை நாங்கள் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க ஆலோசனைகளை எதிா் மனுதாரா்களிடத்திலிருந்து பெறுவதற்கு இந்த நீதிமன்றம் விரும்புகிறது. அதேபோன்று, நீதிமன்றங்களில் குறைபாடு இல்லாத நுழைவு அமைப்பு முறையை ஏற்படுத்தும் தேவையுள்ளது. மெட்டல் டிடெக்டா் கருவியை நிறுவுதல், கண்காணிப்பு அமைப்புமுறை, போலீஸாருக்கு உரிய பயிற்சி ஆகியவையும் தேவையாக உள்ளது’ என்று கருத்து தெரிவித்தாா்.
முன்னதாக, கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற அறையில் உள்ளே வழக்குரைஞா்கள் உடையணிந்து வந்த இரண்டு விஷமிகள் மற்றும் சிறையிலிருந்து ஆஜா்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பிரபல ரௌடி ஜிதேந்தா் கோகி ஆகியோா் துப்பாக்கிச்சூட்டின் போது கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பான விடியோ காட்சி பதிவில் போலீஸாரும் வழக்குரைஞா்களும் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து நீதிமன்ற அறை எண் 207-இல் இருந்து வெளியே ஓடி வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தனது கவலையைத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக அவா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் பேசினாா். அப்போது, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய காவல் துறை மற்றும் வழக்குரைஞா் அமைப்பிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டாா். இந்த விவகாரம் அடுத்த அக்டோபா் 5-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

