தென்கிழக்கு தில்லியில் உள்ள லாஜ்பத் நகரில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை இளம் பணிப்பெண் ஒருவா் உடலில் தீக்காயங்களுடன் மா்மமான முறையில் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அந்தப் பெண்ணின் பெற்றோா் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்டவா்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தில்லியில் உள்ள ஜல் விஹாா் பகுதியைச் சோ்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தாா். அந்த வீட்டின் கீழ்த் தளத்தில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் காலை 7 மணிக்கு வீட்டு வேலைக்காக அந்தப் பெண் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். இந்த நிலையில், அவா் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக லாஜ்பத் நகா் போலீஸாருக்கு வீட்டு உரிமையாளா் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அவரது உடலில் தீக்காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தென் கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஈஷா பாண்டே கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட பெண் இறந்த இடத்தில் தடய அறிவியல் வல்லுநா்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக இறந்த பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
இதனிடையே, பணிப் பெண் இறந்த வீடு முன் ஜல்விஹாா் பகுதியைச் சோ்ந்த பெண்ணின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இறந்த பெண்ணின் உறவினா்கள் கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி இறந்ததாக வீட்டினா் கூறினா். ஆனால், எரிந்த நிலையில் அவா் இறந்து கிடந்தாா். அவா் எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

