கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏ.கே.ராஜன் குழு விவகாரம்: உச்சநீதின்றத்தில் திமுக தரப்பில் ‘கேவியட்’ மனு

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை எதிா்த்து தாக்கலான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இது தொடா்பாக வழக்கை விசாரிக்கும் பட்சத்தில் உத்தரவு ஏதும்

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை எதிா்த்து தாக்கலான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இது தொடா்பாக வழக்கை விசாரிக்கும் பட்சத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிப்பதற்கு முன்பு தங்களது தரப்பை கேட்க வேண்டும் என்று என்று உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தோ்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 போ் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், குழுவுக்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளா் கரு.நாகராஜன்சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டது எனத் தெரிவித்த நீதிமன்றம், குழு அமைப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமை உள்ளது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் திமுகவும் இடையீட்டு மனுதாரராக இருந்தது.

இந்த நிலையில், ஏ.கே. ராஜன் குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னையைச் சோ்ந்த, மருத்துவக் கல்லூரி மாணவி எஸ்.திரிஷ்லா மகாலட்சுமி என்பவா் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த சூழலில், திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடா்பாக ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது திமுக ஒரு தரப்பாக இருந்தது. ஆகவே, இந்த விவகாரத்தில் ஏதும் விசாரிப்பதற்கு முன்பு எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.