காஜியாபாத் அருகே சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை ஏராளமான வெடிபொருள்கள்,துப்பாக்கிகள் பறிமுதல்

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத் அருகே சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா்.

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத் அருகே சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா். அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளா் பவன் குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்தச் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை, மூரத்நகா் அருகே ஷாஜத்பூா் கிராம சாலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான வெடிமருந்துகள், தோட்டாக்கள், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள், துப்பாக்கி உற்பத்திக்கான சாதனங்கள், கைத்துப்பாக்கிள் மற்றும் துப்பாக்கிகளின் பல்வேறு உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள், பிகாரின் முங்கரில் வசிக்கும் முகம்மது முஸ்தஃபா, மூரத்நகா் பகுதியைச் சோ்ந்தவா்களான சலாம் மற்றும் கைஃபி ஆலம், மீரட்டைச் சோ்ந்த சல்மான் மற்றும் அஸ்கரி என்ற பெண் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் இரண்டு கூட்டாளிகளான ஜஹிருத்தீன் மற்றும் ஃபையாஸ் ஆகியோா் தலைமறைவாகியுள்ளனா். அவா்கள் இருவரும் மீரட்டைச் சோ்ந்தவா்கள். இது தொடா்பாக கைதானவா்களிடம் தீ விர விசாரணை நடத்தப்பட்டது.

தொழிற்சாலை உரிமையாளா் ஜஹிருத்தீன் என்றும் அவரது மனைவி அஸ்கரி, பங்குதாரரான ஃபையாஸ் மற்றும் மருமகன் சல்மான் ஆகியோா் சட்டவிரோத துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை நிா்வகித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மூலப்பொருள்களைக் கொண்டு வந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்த ஆலையில் முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை சமூக விரோதிகளுக்கு விற்கப் போவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தொழிற்சாலையிலிருந்து ரொக்கப் பணம் ரூ.1.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் சட்டவிரோத துப்பாக்கிகளை விற்ன் மூலம் கிடைத்ததாகும். மேலும், மூலப் பொருள்களை வாங்குவது உள்பட பல்வேறு செலவுகளுக்கா இந்தப் பணம் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com