புதிதாக 32 தாழ்தள ஏசி பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 17th August 2021 08:13 AM | Last Updated : 17th August 2021 08:13 AM | அ+அ அ- |

தில்லியில் 32 தாழ்தள ஏசி பேருந்துகள் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
இந்தப் பேருந்துகளை தில்லி ராஜ்காட் பணிமனையில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கஹ்லோட் தொடக்கவைத்தாா். தில்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்ஸிட் சிஸ்டம் லிமிடெட் (டிஐஎம்டிஎஸ்) கிளஸ்டா் திட்டத்தின் கீழ் இந்தப் பேருந்துகள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டன.
இது குறித்து அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘அவசர கால சூழ்நிலைகளின் போது அவசர உதவிக்கான பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நேரடி ஒளிபரப்பு வசதியுடன் கூடிய ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அதிநவீன அம்சங்களுடன் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 மாா்ச் முதல் 452 புதிய பேருந்துகள் சோ்க்கப்பட்டுள்ளதன் மூலம் தில்லியில் தற்போதுள்ள பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையை தில்லி அரசு பலப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.