அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரிப்பு
By DIN | Published On : 20th August 2021 07:52 AM | Last Updated : 20th August 2021 07:52 AM | அ+அ அ- |

தில்லியில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது. மேகமூட்டத்துடன் வானிலை மப்பும் மந்தாரமுகமாக இருந்தது. இதனால், புழுக்கத்தில் மக்கள் அவதியுற்றனா்.
தில்லி நகருக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 27.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் பதிவாகியது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை முறையே ஆயாநகரில் 36.6 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 36.8 டிகிரி, நரேலாவில் 36.9 டிகிரி, பாலத்தில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் 153 ஆக பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஆங்காங்கே லேசானது முதல் துறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 சதவீதமாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...