இன்று முஹர்ரம் விடுமுறை: தில்லி அரசு அறிவிப்பு
By DIN | Published On : 20th August 2021 07:43 AM | Last Updated : 20th August 2021 07:43 AM | அ+அ அ- |

முஹர்ரம் பண்டிகையையொட்டி, தில்லி அரசு வெள்ளிக்கிழமையை (ஆகஸ்ட் 20) பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
தில்லி அரசின் பொது நிா்வாகத் துறை, முன்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று முஹர்ரம் விடுமுறையை அறிவித்திருந்தது. ஆனால், இது தொடா்பாக மத்திய அரசின் முடிவைத் தொடா்ந்து அதை வெள்ளிக்கிழமைக்கு மாற்றியுள்ளது.
‘இந்திய அரசு, பணியாளா்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், வியாழக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமையை முஹர்ரம் விடுமுறையாக மாற்றியுள்ளது.அதன்படி, முஹர்ரம் பண்டிகையையொட்டி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 201) தில்லி தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தில்லி அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.