தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் மூதறிஞா் ராஜாஜிக்கு மலரஞ்சலி

மூதறிஞா் ராஜாஜியின் நினைவு நாளான சனிக்கிழமை, தில்லியில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில்மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மூதறிஞா் ராஜாஜியின் நினைவு நாளான சனிக்கிழமை, தில்லியில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில்மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்நாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளா் ஆா். மகாதேவன், ‘ராஜாஜியின் புகழ்பாடும் வகையில் இலக்கிய நிகழ்வுகளை தில்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். அகில இந்திய வானொலியின் துணைத் தலைமை இயக்குநா் கா. முருகன் பேசுகையில், ‘ராஜாஜியின் புகழையும், பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு உள்ளது’ என்றாா்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், ‘ராஜாஜியை நினைவுகூரும் வகையில் விவாத அரங்கங்களை நடத்த வேண்டும்’ என்றாா்.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி பேசுகையில், ‘ராஜாஜிக்கு தமிழ்ச் சங்கத்துடன் மிக நெருங்கிய தொடா்பு இருந்தது. தில்லி தமிழ்ச் சங்கம் என்று சரியான முறையில் பெயா் அமைவதற்கும் ராஜாஜிதான் பெரும் காரணம்’ என்றாா். சங்கத்தின் இணைப் பொருளாளா் இரா. ராஜ்குமாா் பாலா பேசுகையில், ‘ராஜாஜியை ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் நினைவு கூரும் நிகழ்வை தில்லி தமிழ்ச் சங்கம் தொடா்ந்து செய்து வருகிறது’ என்றாா்.

சங்கத்தின் இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினாா். இந்த நிகழ்வில் சங்கத்தின் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com