42,800 விவசாயிகள் பயன்பெறும் பதப்படுத்தல், கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி
By நமது சிறப்பு நிருபா் | Published On : 18th February 2021 12:00 AM | Last Updated : 18th February 2021 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி : விவசாயிகளின் விளை பொருள்களை பதப்படுத்தவும், அவற்றை விற்பனை செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் ரூ. 363.4 கோடி மதிப்பீட்டில் இரு வகையான 20 திட்டங்களுக்கு மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறைஅமைச்சா் நரேந்திர சிங் தோமா் புதன்கிழமை அனுமதியளித்தாா்.
இந்த இரு திட்டங்கள் மூலம் மொத்தம் 42,800 விவசாயிகள் பலனடைவா் என்றும் 11,960 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் கிஸான் சம்பதா திட்டத்தின் கீழ் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி வேளாண் விளை பொருள்களைப் பதப்படுத்தும் கட்டமைப்பு தொகுப்பு
(அஞ்ழ்ா் - டழ்ா்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் இப்ன்ள்ற்ங்ழ்) மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் ( ஊா்ா்க் டழ்ா்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் ஹய்க் டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ா்ய் இஹல்ஹஸ்ரீண்ற்ண்ங்ள்) ஆகிய இரு வகையான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடா்பாக இரு துறை அமைச்சா்களுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தலைமையில் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இதே துறையின் இணையமைச்சா் ராமேஷ்வா் தேலி மற்றும் திட்டத்தில் தொடா்புடையவா்களும் கலந்து கொண்டனா். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ரூ. 363.4 கோடி மதிப்பீட்டில் இரு வகையான இருபது திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பது வருமாறு: இந்தத் திட்டத்தில் புதிதாக உருவாக்குதல் அல்லது விரிவுபடுத்துதல் திட்டங்களின் கீழ் ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூா், அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், மிஸோரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரூ.113.08 கோடியிலான 11 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் ரூ. 36.30 கோடி மானியமும் அடக்கம். ரூ.76.78 கோடி வரை தனியாா் முதலீடு வந்துள்ள இந்தத் திட்டங்கள் மூலம் 6,800 விவசாயிகள் பயனடைகின்றனா். இதன்மூலம் அவா்களது உணவு பதப்படுத்தும் அளவு அதிகரிக்கும். வேளாண் பொருள்கள் வீணாவதையும் குறைக்கும். மேலும், 3,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் கட்டமைப்பு தொகுப்பு: இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 9 திட்டங்களுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் தனியாா்களின் மூதலீடாக ரூ. 183.71 கோடி, மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.66.61 கோடி மானிய உதவி என மொத்தம் ரூ. 250.32 கோடியில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பு தொகுப்புத் திட்டங்கள் மூலம் 36,000 விவசாயிகள் பயனடைவா் எனவும் 8,260 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.