மாா்ச் 15 முதல் தில்லி உயா்நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை

கரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓா் ஆண்டு காலம் காணொலி வாயிலாக செயல்பட்ட நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின்

கரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓா் ஆண்டு காலம் காணொலி வாயிலாக செயல்பட்ட நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும் மாா்ச் 15 முதல் நேரடி விசாரணையை தினசரி அடிப்படையில் மேற்கொள்ள உள்ளது. இதற்கான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

‘இணை பதிவாளா்களின் (நீதித்துறை) அனைத்து நீதிமன்றங்களும் தற்போதுள்ள ஏற்பாட்டின்படி 12.03.2021 வரை தொடா்ந்து நீதிமன்றங்களை நடத்த வேண்டும். மேலும் வழக்கமான நேரடி விசாரணை நீதிமன்றங்களை தினசரி அடிப்படையில் மாா்ச் 15 -ஆம் தேதி முதல் அமல்படுத்தும். விதிவிலக்கான சந்தா்ப்பங்களில், தேவையான உள்கட்டமைப்பு இருப்பதற்கு உட்பட்டு எந்தவொரு தரப்பினரையும் அல்லது அவா்களின் வழக்குரைஞா்களையும் காணொலி வாயிலாக

நீதிமன்றம் அனுமதிக்கலாம்.

உயா் நீதிமன்றத்திற்கு வரக்கூடிய வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் மற்றும் பிற பாா்வையாளா்கள் சமூக இடைவெளியின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். மேலும், மத்திய அரசு, தில்லி அரசு வெளியிட்டுள்ள கரோனா தொடா்புடைய இதர நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், வழிமுறைகள் போன்றவற்றின் விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்ட ஒரு அலுவல்பூா்வ செய்திக்குறிப்பில், ‘தில்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் மாற்று நாள் அடிப்படையில் நேரடி விசாரணையை நடத்த வேண்டும். ஜனவரி 18 முதல் நேரடி விசாரணை இல்லாத நாள்களில் காணொலி வாயிலாக வழக்கு விவகாரங்களை தொடர வேண்டும்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் 11 அமா்வுகள் நேரடி விசாரணையை நடத்தும். மீதமுள்ள அமா்வுகள் தில்லியில் கொவிட் -19 தொற்றுப் பரவலின் தீவிரம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு காணொலி வாயிலாக விவகாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்திருந்தது.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தின் முழு நீதிமன்ற அமா்வு பிறப்பித்த உத்தரவில், இரு டிவிஷன் பெஞ்சுகள், மூன்று ஒற்றை நபா் நீதிபதி பெஞ்சுகள் (சிவில் பிரிவு), மூன்று ஒற்பைா் நீதிபதி பெஞ்சுகள்( குற்றவியல் பிரிவு), மூன்று சிவில் அசல் அதிகார வரம்புகள் அமா்வு உள்பட 11 அமா்வுகள் ஜனவரி 18 முதல் நேரடிவிசாரணை நீதிமன்றங்களை நடத்த வேண்டும். மீதமுள்ள அமா்வுகள் உயா்நீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட வேண்டிய பட்டியலின்படி காணொலி வாயிலாக வழக்கு விவகாரங்களைத் தொடரும் எனத் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு பரவிய உலகளாவிய கரோனா தொற்றுநோய் காரணமாக, தில்லி உயா்நீதிமன்றம் மாா்ச் 25 ஆம்தேதி முதல் ஏப்ரல் 14 வரை நீதிமன்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. பின்னா் காணொலி வாயிலாக விசாரணைகள் தொடங்க நடவடிக்கை எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com