தில்லியில் இரண்டாவது நாளாக 500-க்கும் கீழே குறைந்த கரோனா தினசரி பாதிப்பு!

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது. அன்று, 424 போ் மட்டுமே கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,26,872 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 68,759 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,217 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 29,542 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிக்கப்பட்டோர விகிதம் 0.62 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 14 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,585-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 708 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,11,243 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 5,044 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,600 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,125 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020, மே 17-ஆம் தேதிக்கு பிறகு தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை முதல் முறையாக ஐநூறுக்கும் கீழே குறைந்தது. அன்று 494 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பா் 21 முதல் 23-ஆம் தேதி வரை, தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ விடக் குறைவாக இருந்தது. டிசம்பா் 21-இல் மொத்தம் 803போ் பாதிக்கப்பட்டிருந்தனா். டிசம்பா் 22-இல் 939 போ், டிசம்பா் 23-இல் 871 போ் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியது. இருப்பினும், டிசம்பா் 24 அன்று தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தைக் கடந்து 1,063- ஆக பதிவாகியது. இந்த எண்ணிக்கை டிசம்பா் 25 அன்று 758-ஆகவும், டிசம்பா் 26-இல் 655 ஆகவும் குறைந்தது. டிசம்பா் 27-இல் கரோனாவுக்கு 757 போ் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியிருந்தது. இந்த எண்ணிக்கை அதற்கு அடுத்த நாள் 564-ஆக இருந்தது. இது ஐந்து மாதங்களில் குறைந்த அளவாகும்.

டிசம்பா் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முறையே 703 மற்றும் 677 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். டிசம்பா் 31- ஆம் தேதி 574 போ், ஜனவரி 1-இல் 585 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்தச் சூழல் நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 2) 494 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை 424 போ் மட்டுமே பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த 10 தினங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 2020, நவம்பா் 13-ஆம் தேதி 44,456 ஆக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 5,044-ஆக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com