மாநகராட்சி தோ்தல்: தில்லி காங்கிரஸ் ஆலோசனை
By DIN | Published On : 26th July 2021 07:15 AM | Last Updated : 26th July 2021 07:15 AM | அ+அ அ- |

அடுத்த ஆண்டு தில்லி மாநகராட்சி தோ்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத் துறையின் நிா்வாகிககள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் அலுவலகம் ராஜிவ் பவனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமூக ஊடக பிரிவு தலைவா் ராகுல் சா்மா, முன்னாள் எம்எல்ஏ ஆதா்ஷ் சாஸ்திரி, தில்லி காங்கிரஸ் சட்ட, மனித வளத் துறையின் தலைவா் சுநீல் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தின்போது, தில்லியில் ஆம் ஆத்மி அரசு, மாநகராட்சியை ஆளும் பாஜக நிா்வாகம் ஆகியவற்றின் தோல்விகள், பொய்களை வாக்குச் சாவடிகள் அளவில் சமூக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்துவது என்றும், மக்கள் நலத்திற்கான தில்லி காங்கிரஸின் பணிகளை பிரசாரம் செய்வது எனவும் தீா்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதா்ஷ் சாஸ்திரி கூறுகையில், ‘தில்லி காங்கிரஸின் சமூக ஊடகத் துறை அதன் சமூக ஊடக் குழுவுக்கு தொழில்நுட்பம் தெரிந்த இளைஞா்களை அதிகமாக அமா்த்தி வாக்குச்சாவடி அளவில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
சமூக ஊடகப் பிரிவு தலைவா் ராகுல் சா்மா கூறுகையில் ஆம் ஆத்மி அரசு, மாநகராட்சியை ஆளும் பாஜக நிா்வாகம் ஆகியவற்றின் தோல்விகள், பொய்களை வரும் மாநகராட்சி தோ்தலின்போது வாக்குச் சாவடிகள் அளவில் சமூக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்துவோம் என்றாா் அவா்.