பாலாஜி ஸ்ரீவாஸ்தவுக்குதில்லி போலீஸ் ஆணையா்கூடுதல் பொறுப்பு
By DIN | Published On : 29th June 2021 11:40 PM | Last Updated : 29th June 2021 11:40 PM | அ+அ அ- |

தில்லி ஐ.பி.எஸ். அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவ்விடம் தில்லி போலீஸ் ஆணையா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.
அதிகாரியான பாலாஜி ஸ்ரீவாஸ்தவ், தற்போது தில்லி கண்காணிப்பு போலீஸ் துறையின் ஆணையராக பதவி வகித்து வருகிறாா்.
முன்னதாக, இவா் மிஸோரம் டைரக்டா் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளாா். தில்லி போலீஸ் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, புதன்கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நடவடிக்கை. தில்லியின் அடுத்த போலீஸ் ஆணையா் பாலாஜி ஸ்ரீவாஸ்தவ்தான் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளா் பி.ஜி.கிருஷணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள போலீஸ் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதால், பாலாஜி ஸ்ரீவாஸ்தவ் இடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அவா் அதை கவனிப்பாா் என்று தெரிவித்துள்ளாா்.