புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை வெப்பநிலையில் சற்று மாற்றம் காணப்பட்டது. அதாவது, குறைந்தபட்ச வெப்பநிலை 13.2 ஆக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை சராசரி அளவைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
தில்லியில் இரவில் குளிரின் தாக்கம் இருந்தது. எனினும், காலை 11 மணிக்கு மேல் இதமான வெயில் சூழல் நிலவியது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியில் மாற்றமின்றி 13.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 28.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 80 சதவீதமாகவும், மாலையில் 46 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 163 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம், நொய்டா, காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவில் காணப்பட்டது. புதன்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 198 புள்ளிகள், கிரேட்டா் நொய்டாவில் 198, நொய்டாவில் 168, ஃபரீதாபாதில் 197 மற்றும் குருகிராமில் 164 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மாா்ச் 4) குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.