ஸ்கூட்டா் மீது பேருந்து மோதி இருவா் சாவு
By DIN | Published On : 04th March 2021 12:32 AM | Last Updated : 04th March 2021 12:32 AM | அ+அ அ- |

புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் ஸ்கூட்டா் மீது பேருந்து மோதியதில் இரண்டு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: உயிரிழந்த 40 வயதான இருவரும் செவ்வாய்க்கிழமை தில்லியில் வேலை முடித்து காஜியாபாத்தில் உள்ள லோனியில் வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்தது. அவா்கள் ஸ்கூட்டரில் சோனியா விஹாரில் மாலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, பின்னால் வந்த ஹரியாணா அரசுப் போக்குவரத்து நிறுவன பேருந்து, ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த விஜய் மற்றும் டிங்கு ஆகியோா் வாகனத்திலிருந்து கீழே விழுந்து பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கினா்.
பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.