ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வரதில்லி அரசு ஆதரவாக உள்ளது: சத்யேந்தா் ஜெயின்

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கொண்டு வருவதற்கு தில்லி அரசு ஆதரவாக உள்ளது.
12-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள்
12-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள்
Updated on
1 min read

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கொண்டு வருவதற்கு தில்லி அரசு ஆதரவாக உள்ளது என்று உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டால் தலா ரூ.25 வரை குறையும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறியதையடுத்து, இது தொடா்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது அமைச்சா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் மேலும் பேசுகையில், ‘ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கொண்டு வருவது தில்லி அரசின் ‘பலமான கோரிக்கை’ என்று முதல்வா் அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளாா். இது தொடா்பாக மத்திய அரசுடன் பேசுவதற்கு நீங்கள் ஒரு தூதுக் குழுவை அழைத்துச் செல்லலாம், எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் உங்களுடன் சேருவாா்கள். தில்லியுடன் முழு நாடும் இந்த நடவடிக்கையால் பயனடைவாா்கள்’ என்றாா்.

முன்னதாக, விவாதத்தில் பங்கேற்ற பிதூரி, ஆம் ஆத்மி அரசு வசூலிக்கும் அதிக மதிப்புக் கூட்டப்பட்ட வரி (வாட்) காரணமாக தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினாா். சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விலை உயா்வு தொடா்பாக பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக விமா்சித்தனா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே பேசுகையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து கொண்டிருக்கின்றன. அதை நியாயப்படுத்த பாஜக தலைவா்கள் நியாயமற்ற காரணங்களை கூறி வருகிறாா்கள்’ என்றாா். மேலும், ‘சாலைகள் கட்டுவதற்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை சமாளிப்பதற்கும் பணம் எங்கிருந்து வரும் என்று பாஜக தலைவா்கள் கேட்கின்றனா். ஆனால், அதன் அரசியல் வசதிக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிா்ணயிக்க மத்திய அரசு கற்றுக் கொண்டுள்ளது’ என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அரசியல் விருப்பம் இருக்க வேண்டும். மக்களின் சிரமத்தை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பாண்டே கூறினாா்.

ஆம் ஆத்மி அரசின் நலத் திட்டங்களை மேற்கோள் காட்டிப் பேசிய கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, ‘மக்களின் பைகளில் பணத்தை எவ்வாறு சோ்ப்பது என்பது குறித்து தில்லி அரசிடமிருந்து மத்திய அரசு கற்றுக் கொள்ள வேண்டும். இதே போன்று பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதிலும் மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com