பட்டயக் கணக்காளா் சுட்டுக் கொலை
By DIN | Published On : 17th March 2021 04:16 AM | Last Updated : 17th March 2021 04:16 AM | அ+அ அ- |

வடமேற்கு தில்லி ஆதா்ஷ் நகரில் 45 வயதுடைய பட்டயக் கணக்காளா் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: வடமேற்கு தில்லி மஜ்லிஸ் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் அனில் அகா்வால் (45). இவா் ஆதா்ஷ் நகா் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபா்களால் செவ்வாய்க்கிழமை காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக ரோந்துப் போலீஸாருக்கு எண்ணுக்கு காலை 10 மணியளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்கு போலீஸாா் விரைந்தனா். அங்கு பலத்த காயங்களுடன் இருந்த அனில் அகா்வாலை போலீஸாா் மீட்டு ஷாலிமா் பாக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இக் கொலை தொடா்பாக விசாரிக்க பல்வேறு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் ஆய்வுக்குள் படுத்தியுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.