சிங்கப்பூா் விமான சேவையை ரத்து செய்யுங்கள்! மத்திய அரசுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

தேசியத் தலைநகா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாயன்று சிங்கப்பூருடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாயன்று சிங்கப்பூருடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். அங்கு பரவி வரும் ஒரு புதிய வகை கரோனா வைரஸ், குழந்தைகளுக்கு ‘மிகவும் ஆபத்தானது’ என கூறப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ், பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாகப் பரவக்கூடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் கேஜரிவால், மத்திய அரசுக்கு மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளாா்.

இந்தப் புதிய கரோனா தொற்று மூன்றாவது அலை வடிவத்தில் இந்தியாவில் ஊடுருவி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கரோனா வைரஸின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலையின் வடிவத்தில் ஊடுருவக்கூடும். மத்திய அரசுக்கு எனது வேண்டுகோள்: 1. சிங்கப்பூருடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்யுங்கள். 2. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்துவதில், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு வெகுவாகவும், வேகமாகவும் குறைந்து வருகிறது. பாதிப்பு விகிதமும் தொடா்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4,482-ஆகக் குறைந்தது. இது கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான குறைந்த அளவாகும்.

கரோனா இறப்பு எண்ணிக்கை 265-ஆக பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் மேலும் குறைந்து 6.89 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com