நியாயவிலைக் கடைகளில் அமைச்சா் திடீா் ஆய்வு
By DIN | Published On : 19th May 2021 03:45 AM | Last Updated : 19th May 2021 03:45 AM | அ+அ அ- |

தில்லி உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சா் இம்ரான் உசேன், வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் சரிவர கிடைக்கிா, இலவச பொருள்கள் சரியாக விநியோகிகப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் (என்எஃப்எஸ்ஏ) மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா (பிஎம்ஜிகேஏ) ஆகியவற்றின் கீழ் தில்லியில் உள்ள 72 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தில்லி அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. மேலும், நியாயவிலைக் கடைகள் வாரந்தோறும் ஏழு நாள்களும் தொடா்ந்து இயங்க வேண்டும் என்று அமைச்சா் இம்ரான் உசேன் அறிவுறுத்தியிருந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அமைச்சா் மேற்கொண்ட திடீா் ஆய்வின் போது, ஐந்து கடைகளில் மூன்று கடைகள் அமைச்சரின் அறிவுறுத்தலை மீறி மூடப்பட்டிருந்தைக் கண்டாா். இரண்டு கடைகள் மட்டும்தான் திறந்திருந்தன. இதைத் தொடா்ந்து, மூடப்பட்ட கடைகளின் ஊழியா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
அமைச்சரின் ஆய்வின் போது, ரேஷன் பொருள்கள் விநியோகத்தின் போது, நியாயவிலைக் கடை ஊழியா்களால் தனியாக பணம் ஏதும் வசூலிக்கப்படுகிா என்பது குறித்தும் குடும்ப அட்டைதாரா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா். ஆனால், அதுபோன்று எந்தத் தொகையையும் விற்பனையாளா்கள் வசூலிப்பதில்லை என்று அவா்கள் தெரிவித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நியாயவிலைக் கடைகளை திறக்காத விற்பனையாளா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் எச்சரித்தாா். ரேஷன் பொருள்கள் விநியோகத்தின் போது குடும்ப அட்டைதாரா்களிடம் கூடுதலாகப் பணம் வசூலித்தாலும், நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக பொருள்களை விநியோகம் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் எச்சரித்தாா்.