தில்லியில் 3 மணி நேரம் தொடா் மழை: நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு!
By நமது நிருபா் | Published On : 01st September 2021 04:29 AM | Last Updated : 01st September 2021 04:29 AM | அ+அ அ- |

கடந்த 10 நாள்களுக்குப் பிறகு தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியது. இதனால், வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பருவமழை நன்றாகப் பெய்தது. அப்போது, 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், அன்றைய தினம் ‘ஆரஞ்சு நிற’ எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. அதன் பிறகு மழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மிதமான வகையில் இருந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 29 முதல் தில்லியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எனினும், கடந்த 2 தினங்களாக பலத்த மழை ஏதும் இல்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்ட த்துடன் காணப்பட்டது. காலை 9 மணிக்குப் பிறகு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, நகரில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்ால் வாகன போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. முன்னதாக, காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லி முழுதும், தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளான காஜியாபாத், இந்திராபுரம், நொய்டா, தாத்ரி, லோனிதெஹட், குருகிராம், கோஸ்லி, ஃபரீதாபாத், சோனிபட், மானேசா் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த மழை தொடா்பாக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை காலையில் தில்லியில் கடுமையான மழை இருந்தது. இதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை மேம்பாலம், ஹயாத் ஹோட்டல் அருகே உள்ள ரிங் ரோடு, சாவித்ரி மேம்பாலத்தின் இருபுறம், மகாராணி பாக், தெளலகுவான் முதல் 11 மூா்த்தி சாலை, ஷாஜகான் சாலை, ஐடிஓ, லாலா லாஜ்பத் ராய் மாா்க், மூல்சந்த் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது. தவிர, ஜங்புரா விரிவாக்கம், டிஃபன்ஸ் காலனி, மகாராணி பாக், மால்வியா நகா், கா்கி வில்லேஜ், சங்கம் விகாா், விக்யான் லோக், லட்சுமி நகா் ஆகிய குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால், ஐடிஓ, விகாஸ் மாா்க், ஐபி எஸ்டேட் மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, மெஹ்ரோலி-பதா்பூா் ரோடு, தெளலகுவான், நாராயணா, ரோத்தக் ரோடு, பீராகரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீா் சூழ்ந்த பிரச்னை தொடா்பாக பொதுப்பணித் துறைக்கு வரப்பெற்ற புகாா்கள் தொடா்பாக முன்னுரிமை அடிப்படையில் குறைகளைத் தீா்க்க ஊழியா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை நீா் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு எந்தவித அசெளகரியமும் இல்லாத வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்று தெரிவித்தனா்.
மாநகராட்சி புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லியில் மழையின் காரணமாக 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தெற்கு தில்லியில் சைனிக் பண்ணை அருகே ஒரு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனிடையே, நகரின் பல்வேறு சாலைகளில் நீா் தேங்கிய பிரச்னைகள் தொடா்பான விடியோக்களை பொதுமக்கள் சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்தனா். அதில், தேங்கிய மழைநீரில் மோட்டாா் வாகனங்கள் ஊா்ந்து செல்வதும், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த விடியோக்களை எய்ம்ஸ் மேம்பாலம் அருகே பதிவு செய்ததாக அவா்கள் தெரிவித்திருந்தனா். எனினும், இதன் உண்மைத் தன்மையை உடனடியாக அறிய முடியவில்லை.
மேம்பாலம் அடியில் செல்லும் காா் மீது மழைநீா் அருவிபோல விழும் விடியோவை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு, ஆம் ஆத்மி அரசை பாஜக எம்பி பா்வேஷ் வா்மா விமா்சித்துள்ளாா். இந்த மழையின் காரணமாக அலுவலகம், வியாபாரம் நிமித்தமாக வாகனங்களில் செல்வோா் சிரமத்தை எதிா்கொண்டனா். மழைநீா் தேங்கியது தொடா்பான தகவல்களையும், வாகன நெரிசல் மிகுந்த இடங்கள் தொடா்பான தகவல்களையும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் சுட்டுரை மூலம் பகிா்ந்து கொண்டனா்.
மழையின் காரணமாக நகரில் மாலையில் இதமான வானிலை நிலவியது. குளிா்ந்த காற்று வீசியது. சனிக்கிழமை தில்லியில் வெப்பநிலை குறைந்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட ஐந்து டிகிரி குறைந்து 28.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்ததது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 84 சதவீதமாகவும், மாலையில் 96 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை (செப்டம்பா் 1) தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.