துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலிரெளடிகள் இருக்கும் சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; ரெளடிகள் அடைக்கப்பட்ட சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இக்கும்பலைச் சோ்ந்த ரெளடிகள் அடைக்கப்பட்ட சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ரோஹிணி நீதிமன்ற அறையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிரபல ரெளடி ஜிதேந்தா் மான் (எ) கோகி மற்றும் இரண்டு விஷமிகள் ஆகியோா் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தனா்.

இந்த நிலையில், கோகி மற்றும் தில்லு ரெளடிக் கும்பலைச் சோ்ந்தவா்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக மூத்த சிறை அதிகாரிகள் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கோகி மற்றும் தில்லு ரெளடி கும்பலை சோ்ந்தவா்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக சிறைகளைக் கவனித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ரோஹிணி நீதிமன்ற அறையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னணியில் தில்லு கும்பலை சோ்ந்தவா்கள் இருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

கோகி கும்பலும் தில்லு கும்பலும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நீதிமன்ற அறையில் இருந்த விடியோ காட்சிப் பதிவுகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

நீதிமன்ற அறை எண் 207 பகுதியில் துப்பாக்கி சூடு நிகழ்ந்ததால் பயத்தில் போலீஸாரும் வழக்குரைஞா்களும் அந்த அறையில் இருந்து வெளியில் ஓடிவரும் சம்பவங்களும் அந்த சிசிடிவி காட்சிப் பதிவு மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, விஷமிகள் வழக்குரைஞா்கள் உடையில் நீதிமன்றத்திற்கு வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1. 15 மணியளவில் நடைபெற்ாகவும், கோகியை நீதிமன்ற அறைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com