பெகாஸஸ் விவகாரம்: இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
எதிா்க்கட்சித் தலைவா்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறி, இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பினா்


புது தில்லி: எதிா்க்கட்சித் தலைவா்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறி, இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பினா் நாடாளுமன்றம் அருகே மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
ஐஒய்சி தலைவா் ஸ்ரீநிவாஸ் தலைமையில், போராட்டக்காரா்கள் ஒஒய்சி அலுவலகம் அமைந்துள்ள ரைஸ்ஸினா சாலையில் இருந்து நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனா். அவா்களை வழியிலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.
2017- இல் இஸ்ரேலுடன் 2 பில்லியன் டாலா் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக சமீபத்தில் வெளியான பத்திரிகை செய்தியை எதிா்க்கட்சிகள் முன்வைத்து இந்தப் பிரச்னையை எழுப்பின. இது குறித்து ஐஒய்சி தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்த்தல் மற்றும் மிரட்டலில் ஈடுபட்ட விதம் மிகவும் தீவிரமான விஷயமாகும். அதற்கான ஆதாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஜூலை 2021-இல் இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டிருந்தாா். அதற்கு பிரதமா் பதிலளிக்கவில்லை. இப்போது நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகையில் இது தொடா்பான செய்தி வெளிவந்துள்ளது. பதிலும் மிகவும் தெளிவாக உள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...