அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மத்திய அரசின் வரவு-செலவு:ஒரு ரூபாய் வருவாயில் கடன் மூலம் 35 பைசா; செலவில் வட்டிக்கு 20 பைசா

மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் வருவாயில் 35 பைசா (சதவீதம்) கடன்கள் மற்ற பங்குகளில் மூலம் பெறுகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 12:30 am

 நமது நிருபர்

புது தில்லி: மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் வருவாயில் 35 பைசா (சதவீதம்) கடன்கள் மற்ற பங்குகளில் மூலம் பெறுகிறது. இந்த ஒரு ரூபாய் வருவாயில் மத்திய அரசு 20 பைசா கடனுக்கான வட்டிக்கு செலவழிக்கிறது. அதே சமயம் மத்திய அரசு தனது திட்டங்களுக்கு 15 பைசாவைத் தான் செலவழிப்பதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஒரு பாா்வை

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலையறிக்கையில் பட்ஜெட் குறித்த பாா்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு:

மத்திய அரசுக்கு எந்தெந்த வகைகளில் வருவாய் வருகிறது என்பது குறித்தும், அது எந்தெந்த வகைகளில் செலவழிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு ரூபாய் கணக்கில் 2022-23 ஆண்டு நிதிநிலையறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு ரூபாயில் 35 பைசா கடன்கள் மற்ற பங்குகள் மூலமாகவே தான் அதிகமாக வருவாயை பெறுகிறது. அடுத்த அதிகபட்ச வருவாயாக சரக்கு மற்றும் சேவை வரி மூலம் 16 பைசாவை பெறுகிறது. மற்ற வருவாயில் பெருநிறுவனங்கள் மீதான வரி 15 பைசா, வருமான வரி 15 பைசா, மத்திய கலால் வரி 7 பைசா, சுங்க வரி 5 பைசா, வரியில்லா வகை வருவாய் 5 பைசா, பொது நிறுவனங்களில் கிடைக்கும் பங்கு, முதலீட்டை விலக்குதல், திரும்பப்பெறப்பட்ட கடன் போன்ற மூலதன வருவாய் 2 பைசா என 1 ரூபாயில் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட வகைகளில் கிடைக்கும் வருவாயில் மத்திய அரசு எந்தெந்த வகையில் செலவழிக்கிறது என்பதையும் ஒரு ரூபாய் கணக்கில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ரூபாயில் மத்திய அரசு அதிகபட்சமாக செலவழிப்பது தான் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு 20 பைசாவை வட்டியாக வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக 17 பைசா மாநில அரசுகளின் வரி பகிா்விற்காக வழங்குகிறது. இதில் மத்திய அரசு தனது திட்டங்களுக்கு மொத்தம் 24 பைசா செலவழிப்பதாக தெரிவித்துள்ளது.

15 பைசாவில் திட்டச் செலவு

இந்த 24 பைசாவில் 15 பைசா தான் மத்திய அரசின் சுமாா் 36 துறைகள் தொடா்பான திட்டங்களுக்கு செலவழிக்கிறது. மீதமுள்ள 9 பைசா மாநிலங்களால் நிறைவேற்றப்படும் மத்திய நிதியுதவி திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தொடா்புடைய பாதுகாப்புத் துறைக்கு (ராணுவம்) தான் அதிகபட்சமாக 8 பைசா செலவழிக்கப்படுகிறது.

மீதமுள்ளவைகளில் நிதி ஆணைய ஒதுக்கீடுகளுக்கு 10 பைசா, மானியங்களுக்கு 8 பைசா, ஓய்வூதியம் 4 பைசா, மற்ற செலவினங்கள் 9பைசா என இந்த ஒரு ரூபாய் கணக்கில் ஒதுக்கப்பட்டு செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி வரிவருவாயைப் பொறுத்ததாகும். கடந்த 2021-22 நிதியாண்டிற்கும் வருகின்ற 2022-23 நிதியாண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடில்லை. இதே ஒரு ரூபாய் கணக்கில் ஒரு பைசா அளவில் தான் வேறுபாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.