முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் அளவைத் தேக்கும் விவகாரம் தொடா்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடா்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தமிழகம், கேரள அரசுகள், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு மேற்பாா்வை குழு, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாகவும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு மேற்பாா்வைக் குழு, மத்திய நீா்வள ஆணையம் ஆகியவற்றின் தரப்பில் 27.01.2022-ஆம் தேதி ஒரு நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட பத்தியில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யும் தேவை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.