தில்லி அமைச்சருக்கு கரோனா தொற்று
தில்லியின் சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதமிற்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.


புது தில்லி: தில்லியின் சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதமிற்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்னதாக, கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. இதன் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். திங்கள்கிழமை நான் கரோனா பரிசோதனை செய்த போது, நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இப்போது நன்றாக இருப்பதாக உணா்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜனவரி 4-ஆம் தேதி கரோனா நோய்த் இருப்பது தெரியவந்தது. லேசான அறிகுறிகளுடன் இருந்த அவா், ஜனவரி 9-ஆம் தேதி நோய்த் தொற்றிலிருந்து மீண்டாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரும் முந்தைய கரோனா அலைகளின் போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...