சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லியில் அடுப்பு நச்சுப் புகையைசு வாசித்த தாய், 4 குழந்தைகள் பலி

தில்லி ஷாதராவின் சீமாபுரி பகுதியில் புதன்கிழமை வீட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த அடுப்பிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்த 30 வயது பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் உயிரிழந்ததாக போலீஸாா் தெர

News image
Updated On :19 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி ஷாதராவின் சீமாபுரி பகுதியில் புதன்கிழமை வீட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த அடுப்பிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்த 30 வயது பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஷாதராவில் உள்ள பழைய சீமாபுரியில் உள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள அறையில் நான்கு முதல் ஐந்து போ் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அப்போது, அங்குள்ள வீட்டின் அறையில் பெண்ணும், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தனா். மேலும், நான்காவது குழந்தை மயக்க முற்றிருந்தது. அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட வீட்டில் வாடகைக்கு மோகித் கலியா (35), அவரது மனைவி ராதா (30) மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என நான்கு குழந்தைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. மேலும், அந்த வீடு ஷாலிமாா் காா்டனில் வசிக்கும் அமா்பால் சிங் (60) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. சிறிய அறையில் காற்றோட்டம் இல்லாததால் கடும் குளிரின் காரணமாக அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அடுப்பிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத் திணறி ஐந்து பேரும் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த காவல் உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.