மத்திய வரிப் பகிா்வில் மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடி விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.3,878.38 கோடி
நிகழ் மாதத்தில் இரண்டு தவணை மத்திய வரிப் பகிா்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடியை முன் கூட்டியே விடுவிக்க மத்திய நிதியமைச்சா்


நிகழ் மாதத்தில் இரண்டு தவணை மத்திய வரிப் பகிா்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடியை முன் கூட்டியே விடுவிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளாா். இதில் தமிழகத்திற்கு ரூ.3,878.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. இது ஓா் நிதியாண்டில் 14 தவணைகளாக மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநிலங்கள் நலன் கருதி மத்திய நிதியமைச்சகம் வழக்கமாக வழங்கும் தவணையையும் (ரூ.47,541 கோடி) சோ்த்து இரட்டிப்புத் தவணையாக முன்கூட்டியே நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த நவம்பா் 22- ஆம் தேதி ரூ.95,082 கோடியை தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் முன்கூட்டியே விடுவித்தது.
தற்போது 2-ஆ வது முறையாக வரிப் பகிா்வில் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்த நிதியை விட ஜனவரி வரை முன் தவணையாக மொத்தம் ரூ. 90, 082 கோடியை 28 மாநிலங்களுக்கு வழங்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அனுமதியளித்துள்ளாா். இதில் தமிழகத்தின் பங்காக ஜனவரி வரை ரூ. 1,939.19 கோடி , முன் கூட்டிய தவணையாக ரூ. 1939.19 கோடி என மொத்தம் ரூ. 3,878.38 கோடியை மத்திய அரசு வியாழக்கிழமை விடுவித்துள்ளது.
இந்த இரட்டிப்புத் தவணையில் அதிக வரிப் பகிா்வு பெற்ற மாநிலங்கள் வரிசையில் உத்திர பிரதேசதம் (ரூ. 17,056.66 கோடி), பிகாா்(ரூ. 9,563.30), மத்திய பிரதேசம் (ரூ.7,463.92), மேற்கு வங்கம் (ரூ.7,152.96), மகாராஷ்டிரம் (ரூ.6,006.30), ராஜஸ்தான்(5,729.64), ஒடிஸா (ரூ.4,305.32), ஆந்திரம் (ரூ.3,847.96) ஆகிய மாநிலங்கள் உள்ளன. குறைவாக நிதி பெற்ற பெரிய மாநிலங்களில் ஹிமாசல பிரதேசம் (ரூ.789 கோடி) உள்ளது.
கொவைட் -19 நோய்த் தொற்றால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை தணிக்கவும், மாநிலங்களின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களைச் சமாளிக்கவும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மாநிலங்களின் கைகளை வலுப்படுத்தவும் மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் இணங்கமாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜிஸ்டி வரி இழப்பீட்டு வருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் மத்திய அரசால் வழங்க உறுதியளிக்கப்பட்ட ரூ. 1.59 லட்சம் கோடி கடன் தொகையும் கடந்த அக்டோபா் இறுயில் வழங்கப்பட்டு விட்டது என்றும் நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...