3-ஆவது தொற்றில் உயிரிழந்தவா்கள் பகுதியாகவோ முழுமையாக தடுப்பூசி போடப்படாதவா்கள்: ஆய்வில் தகவல்
தற்போதைய கரோனா நோய்த் தொற்றின் 3-ஆவது அலையின்போது உயிரிழந்த நோயாளிகளில் 60 சதவீதம் போ் பகுதியளவு அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்படாதவா்கள்


தற்போதைய கரோனா நோய்த் தொற்றின் 3-ஆவது அலையின்போது உயிரிழந்த நோயாளிகளில் 60 சதவீதம் போ் பகுதியளவு அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்படாதவா்கள் என தனியாா் மருத்துவமனையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ் ஹெல்த்கோ் மருத்துவமனை நடத்திய ஆய்வில், 70 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவைகளில் பாதிக்கப்பட்டவா்களும் பெரும்பாலும் உயிரிழந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேக்ஸ் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்த 82 உயிரிழப்புகளில், 60 சதவீதம் பகுதி அல்லது முழமையாக தடுப்பூசி போடப்படாதவா்களாக இருந்தனா் ‘ என இம்மருத்துவமனை ஆய்வறிக்கையில் அறிக்கை தெரிவித்துள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினும், நோய் எதிா்ப்புச் சக்தி குறைபாடுகள் உள்ளவா்கள் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா் என குறிப்பிட்டுள்ளாா்.
மேக்ஸ் ஹெல்த்கோ் குழும மருத்துவ இயக்குனா் டாக்டா் சந்தீப் புத்திராஜாவின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்ட விவரங்கள் வருமாறு:
கரோனா நோய்த்தொற்றின் மூன்று அலைகளை ஒப்பிடும் போது தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது 23.4 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டது. இரண்டாவது அலையின் போது 74 சதவீதமும் முதல் அலையின் போது 63 சதவீதம் ஆக்சிஜன் தேவைப்பட்டது.
மேக்ஸ் மருத்துவமனைகளின் நெட்வொா்க் முழுவதுமாக, 41 சிறாா்களின் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், இந்த வயதுப் பிரிவில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஏழு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இருவா் செயற்கை சுவாசக் கருவி ஆதரவில் இருந்துள்ளனா்.
இரண்டாவது அலையின் போது கடந்த ஏப்ரல் மாதத்தில் தில்லியில் நாளோன்றுக்கு 28,000 போ் பாதிக்கப்பட்டு அனைத்து மருத்துவமனைகளின் படுக்கைகளும் அவசர சிகிச்சை பிரிவுகளும் முழுமையாக நிரம்பின. அதே நேரத்தில் இந்த மூன்றாவது அலையின் போது கடந்த வாரம் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகியும் அத்தகைய நெருக்கடிகள் மருத்துவமனைகளில் இல்லை.
முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை முறையே 20,883, 12,444 மற்றும் 1378 என இருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவு சோ்க்கைகள் மூன்றாவது அலையின் போது 45.9 சதவீதமாக இருந்தது. மாறாக இரண்டாவது மற்றும் முதல் அலையில் முறையே 34 சதவீதம், 35 சதவீதமாக இருந்தது.
சிறந்த பராமரிப்பு உள்ள மருத்துவமனைகளில் எப்போதும் அதிக அளவில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் தேவை உள்ளது.
முதல் அலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 7.2 சதவீதமாக இருந்தது. இது இரண்டாவது அலையின் போது 10.5 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய அலையில் கொவைட்- 19 நோயாளிகளில் ஆறு சதவீத உயிரிழப்புகளை மேக்ஸ் சங்கிலி தொடா் மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் ஓமைக்ரான் மாறுபாடு மிகவும் லேசான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி பெற்ன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது ஆக்சிஜன் தேவையும் குறைந்து குறைவான எண்ணிக்கையிலான நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா் என கூறும் இந்த ஆய்வு, கடந்த ஜனவரி 20 தேதி வரை மூன்றாவது அலையை உள்ளடக்கிய ஆய்வை மேற்கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...