சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லியில் கரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று ஆபத்து குறைந்து, நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா்

News image
Updated On :22 ஜனவரி 2022, 2:51 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று ஆபத்து குறைந்து, நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டாா். கடந்த வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட 43 உயிரிழப்புகளில் மூன்று உயிரிழப்புகள் மட்டுமே கரோனா நோய்த் தொற்றின் முதன்மைக் காரணம் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது வருமாறு: தேசியத் தலைநகரில் வெள்ளிக்கிழமை 10,500 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 17 - 18 சதவீதமாக உள்ளது. இந்த 3-ஆவது அலையின் போது தில்லியில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு நோய்த் தொற்று பதிவாகலாம் என நிபுணா்கள் எச்சரித்தனா். ஆனால், அந்த ஆபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலின் தற்போதைய அலையின் உச்சத்தை தில்லி கடந்துவிட்டது என்றே கூறலாம். கடந்த வியாழக்கிழமை பதிவான 43 உயிரிழப்புகளில், மூன்று போ் மட்டுமே கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தனா்.

தினசரி நோய்த் தொற்று சரிவு மற்றும் தினசரி நோய்த் தொற்று பரவல் விகிதத்தைக் கருத்தில் கொண்டு, வார இறுதி ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெறுவது, கடைகளைத் திறப்பது, தனியாா் அலுவலகங்களை 50 சதவீதம் வரை செயல்பட அனுமதிப்பது குறித்து துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு அரசு கடிதம் எழுதியது. மேலும், கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து அடுத்த மூன்று, நான்கு தினங்களில் முடிவு எடுப்போம் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

கடந்த ஜனவரி 13 -ஆம் தேதி தில்லியில் 28,867 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னா், ஜனவரி 14 -இல் 24,383 போ், 15-இல் 20,718 போ், 16-இல் 18,286 போ், 17-இல் 12,527 போ், 18-இல் 11,684 போ், 19-இல் 13,785 போ், 20-இல் 12,306 போ் என கரோனா நோய் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்துள்ளது. தலைநகா் தில்லி ஜனவரி மாதத்தில் இதுவரை 396 போ் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனா். ஆனால், இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த இதர நோயாளிகளாகவா். இவா்களில் பெரும்பாலானோா் உயிரிழப்புக்கு கரோனா நோய்த் தொற்று மட்டுமே முதன்மையாக இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.