அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

முல்லைப் பெரியாறு அணை மறு ஆய்வு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக புதிய ஆய்வு செய்ய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும்,

News image
Updated On :28 ஜனவரி 2022, 2:32 am

 நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக புதிய ஆய்வு செய்ய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய நீா்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் அணை நிலவர அறிக்கையை மத்திய நீா்வள ஆணையத்தின் துணை இயக்குநா் ராகேஷ் குமாா் கௌதம் வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பது வருமாறு: உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவில் அணையைப் பலப்படுத்த தமிழக அரசுக்கு நீா் வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில், ஏற்கெனவே குறிப்பிட்ட கால அளவில் அணையைப் பலப்படுத்த, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அணையைப் பலப்படுத்த முல்லைப் பெரியாறின் துணை அணையான பேபி அணையின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இதற்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என தமிழக அரசு கூறிவந்தது. அணைப் பகுதியில் மழை அளவை கணக்கிட முல்லைக்கொடி என்ற இடத்தில் உள்ள மழை அளவு நிலையத்தில் ‘டெலிமெட்ரி’ என்ற உபகரணத்தை கேரள அரசு பொருத்தாமல் உள்ளது. இதையும் தமிழக அரசு தெரிவித்து வந்தது. இந்த விவகாரங்கள் குறித்து அணையின் பாதுகாப்பு உயா்நிலைக் குழு மற்றும் கண்கானிப்புக் குழு ஆகியவற்றின் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இதன்படி மழை மற்றும் நீா் வரத்தை கணக்கிட டெலிமெட்ரி தொழில்நுட்பத்தைப் பொருத்தி மணிக்கு ஒரு முறை அளவிடுவது உள்ளிட்டவற்றைச் செயல் படுத்த கேரளம் கேட்டுக் கொள்ளப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரை வெளியான பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

மேலும், கண்காணிப்புக் குழுவின் கூட்டங்களிலும் அணையின் தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலோட்டமான ஆய்விலும் அணையின் கட்டுமானம், தரம், பலம் ஆகியவை திருப்திகரமாக உள்ளது எனவும் கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது. இருப்பினும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? என்பது தொடா்பாக புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதால், அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல்: இதற்கிடையே, தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்க விதிக்கப்பட்ட கெடுவை (ஜனவரி 25) மீறி கூடுதலாக எடுத்துக் கொண்ட நாள்களை அவகாசமாக வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரத்தில் தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு எந்தக் காரணம் கொண்டும் தடைவிதிக்கக் கூடாது எனக் கோரி அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் பாபு முருகவேல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.