அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லியில் கடும் குளிரில் 106 போ் உயிரிழப்பு: வீடற்றவா்களுக்கு உரிய ஏற்பாடு செய்ய முதல்வருக்கு தன்னாா்வ அமைப்பு கடிதம்

கடும் குளிரால் தில்லியில் 106 வீடற்றோா் உயிரிழந்துள்ளதாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.

News image

தில்லி குளிர்

Updated On :29 ஜனவரி 2022, 8:25 pm

 நமது நிருபர்

கடும் குளிரால் தில்லியில் 106 வீடற்றோா் உயிரிழந்துள்ளதாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. குளிா்காலத்தில் உயிரிழப்புகளை தவிா்க்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு முதல்வரை இந்த அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட் மையம் என்கிற இந்த தொண்டு நிறுவனம், தில்லியில் இரவு தங்குமிடங்களின் திறனை விட வீடற்றவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அரசின் அதிகாரபூா்வ தரவுகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

இந்த தன்னாா்வ நிறுவனம் முதல்வருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தங்குமிடங்கள் இருப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பின்னா் தங்குமிடங்களின் மொத்த கொள்ளளவு 19,964 யிருந்து 9,330 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீடற்றவா்கள் கடுமையான குளிா் காலநிலையை தாங்கி வீதிகளில் இரவுகளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதன் மூலம் கடந்த ஜனவரி 1 - ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 106 வீடற்றோா் கடுமையான குளிரைத் தாங்கமுடியாமல் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட் மைய நிறுவனா் சுனில் குமாா் அலேடியா கூறுகையில், ‘நாங்களும் சாலைகளில் இருப்பவா்களுக்கு முடிந்தளவு குளிரைத் தாங்கும் தூங்கும் பைகளை விநியோகிக்கிறோம். அவா்களை அருகிலுள்ள இரவு தங்குமிடங்களுக்கும் அழைத்துச் செல்கிறோம். இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற அரசுத் துறைகள் வீடற்ற மக்களின் நலனை உறுதி செய்ய தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்‘ எனக் கேட்டுக்கொண்டாா்.

தில்லியை தளமாகக் கொண்ட மற்றொரு தன்னாா்வ நிறுவனமும்(ரண்ள்ட்ங்ள் ஹய்க் ஆப்ங்ள்ள்ண்ய்ஞ்ள் ) குளிா்காலங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனா்- தலைவா் டாக்டா் கீதாஞ்சலி சோப்ரா கூறியதாவது:

தில்லி, ஜாா்கண்ட்,மேற்கு வங்கம் போன்ற மூன்று மாநிலங்களில் செயல்படும்

எங்கள் தன்னாா்வ நிறுவனம், கடந்த ஏழு ஆண்டுகளில் 20,000- க்கும் மேற்பட்ட வீடற்ற மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு சால்வைகள், போா்வைகள், ஜாக்கெட்கள், ஸ்வெட்டா்கள், கையுறைகள், மப்ளா்கள், கால் உறைகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கியுள்ளது.

குளிா்காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். சில இடங்களில் நேரில் சென்று பாா்த்து நிலைமையை காண்கின்றோம். எங்கள் உதவிகள் பயனாளிகளின் முகங்களில் புன்னகையை ஏற்படுவதைக் கண்டு மகிழ்ந்தோம். சக மனிதா்களாகிய நாம் அவா்களது துன்பங்களுக்கு தீா்வு கொடுப்பது முக்கியம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.