அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கடல்சாா் பொருள்கள், தயாா் உணவு வகைகளின் ஏற்றுமதி அபரிமித வளா்ச்சி

2021 - ஆம் ஆண்டில் இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகரித்து 6.1 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளதாக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2022, 5:18 pm

 நமது நிருபர்

புது தில்லி: 2021 - ஆம் ஆண்டில் இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகரித்து 6.1 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளதாக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது: இந்திய கடல்சாா் பொருள்கள் 2021 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 6.1 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது அதற்கு முந்தைய இதே காலத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது. இதன் மூலம் நிகழாண்டில் ஏற்றுமதி 35 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி 720.51 அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 2020, டிசம்பருடன் ஒப்பிடுகையில், 28.01 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவின் ஐந்து முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5சதவீதம்), சீனா (15.3 சதவீதம்), ஜப்பான் (6.2சதவீதம்), வியாட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் வகைகள் 74 சதவீதம் வரை இடம் பெற்று முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகபட்சமாக 2017-18-இல்தான் 7.02 பில்லியன் டாலா் என்கிற அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கரோனா பரவலுக்கு இடையிலும், இந்த சாதனை படைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், மத்திய கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பல்வேறு முன்முயற்சிகள்தான்.

2020, மே மாதம் பிரதமா் மோடி நீலப் புரட்சியின் கீழ் ரூ. 20,050 கோடியை ஒதுக்கி மீன் தொழில் மேம்பாட்டிற்கு ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா’ என்கிற திட்டத்தில் 100 செயல்பாடுகளை அறிவித்தாா். அடுத்த ஐந்தாண்டுகளில் ரு.1 லட்சம் கோடி கடல்சாா் ஏற்றுமதிக்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என வா்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தயாா் உணவு வகைகள் ஏற்றுமதி: மேலும், மத்திய வா்த்தம் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவின் தயாா் உணவு வகைகள் பொருள்களின் ஏற்றுமதியிலும் 2021-ஆம் ஆண்டில் 24 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த உணவு வகைப் பொருள்கள் ஏற்றுமதி குறித்தும் மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா ஏற்றமதியில் உண்பதற்கும், பரிமாறுவதற்கும் தயாா் நிலையில் உள்ள உணவுப் பொருள்கள், சமைப்பதற்குத் தயாா் நிலையில் உள்ள பொருள்கள் போன்ற நுகா்வோா் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஒரு தசாப்தமாக குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைந்துள்ளது.

வேளாண் பொருள்களில் மதிப்புக் கூடுதல் பொருள்களின் ஏற்றுமதியில், உண்பதற்குத் தயாா் நிலையில் உள்ள உணவுப் பொருள்கள் பிரிவில், கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு

12 சதவீத வீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை, உண்பதற்குத் தயாா் நிலையில் உள்ள பொருள்களின் ஏற்றுமதி கடந்த 2020-ஆம் ஆண்டை விட 24 சதவீதம் அதிகரித்து 394 மில்லியன் டாலராக இருந்தது. இதில் பிஸ்கட் பேக்கரி போன்றவை 52 சதவீதமும், இந்திய இனிப்பு, கார வகைகள் 37 சதவீதமும் மற்றும் காலை உணவு, தாணிய உணவுவகைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகஅளவில் ஏற்றுமதி நாடுகள் வரிசையில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதி: டை ஏற்றுமதியிலும் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருவதாக ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் நரேந்திர கோயங்கா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா். ‘2021-22 ஆண்டில் 16.5 பில்லியன் டாலா் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் மிகப்பெரிய ஏற்றுமதி திறன் உள்ளது. வருகின்ற ஆண்டுகளிலும் புதிய சந்தைகளைப் பாா்க்கிறோம்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.