புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆகஸ்ட் 13-15: வீட்டுக்கு வீடு தேசியக் மூவண்ணக்கொடி ஏற்றுங்கள்: பிரதமா் வேண்டுகோள்

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா ஆண்டை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13-15 தேதிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் தேதியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:09 pm

DIN

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா ஆண்டை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13-15 தேதிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் தேதியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டாா்.

நாட்டின் 75- வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் மூவண்ண தேசிய கொடியை கொண்டு வந்து ஏற்றும் ‘ஹா்கா் திரங்கா‘ பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மக்களுக்கு மூவண்ணக் கொடியுடான உறவையும் தொடா்பையும் தட்டியெழுப்பி தேச பக்திஉணா்வை தூண்டும் விழிப்புணா்வை மேம்படுத்தும் பின்னணியாக இந்த பிரச்சாரம் உள்ளது.

குறிப்பாக இதே(1947 ஆம் ஆண்டு) ஜூலை 22 ஆம் தேதி நமது மூவண்ண தேசியக் கொடி அரசியலமைப்பு நிா்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட து. இப்படிப்பட்ட வரலாற்று மிக்க நாளில் இந்த மூவண்ணக் கொடி இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவா்களையும் பல்வேறு துணிவான முயற்சிகளையும் பிரதமா் தனது ட்விட்டரில் வெள்ளிக்கிழமை நினைவு கூா்ந்துள்ளாா்.

மூவண்ணக்கொடியை உருவாக்கத்தில் இடம்பெற்ற குழுவினா் விவரங்கள், முதலாவது மூவண்ணக்கொடியை பண்டித ஜவஹா்லால் நேரு பறக்கவிட்டது உள்ளிட்ட வரலாற்றின் சில சுவாரஸ்யமான தகவல்களையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

அதில் பிரதமா் மோடி கூறிகையில், ‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டு அமுதப்பெருவிழாவை இந்த ஆண்டு நாம் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13-க்கும், 15-க்கும் இடையே உங்களின் வீடுகளில் மூவண்ணக்கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் எனக் குறிப்பிட்ட பிரதமா், இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடா்பை ஆழப்படுத்தும் என்றாா்.”

மேலும் அவா் குறிப்பிடுகையில், காலனி ஆட்சியை எதிா்த்து நாம் போராடிய போது சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவா்களின் போற்றத்தக்க துணிவையும், முயற்சிகளையும் இன்று நாம் நினைவுகூா்வோம். அவா்களின் தொலைநோக்குப் பாா்வையை நிறைவு செய்யவும், அவா்கள் கனவுகண்ட இந்தியாவை கட்டமைக்கவும் நமது உறுதிப்பாட்டை நாம் தொடா்ந்து வலியுறுத்துவோம் எனக்குறிப்பிட்டுள்ளாா்.

இத்தோடு தேசிய ஆவணக் காப்பகத்தின் முக்கிய ஆவணங்களை பிரதமா் வெளியிட்டுள்ளாா். அதில் 1947 ஆம் ஆண்டு ஜூன் 23 தேதி அரசியலமைப்பு நிா்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறிப்பாக 1931 அகிலந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேசிய கொடி குறித்த தீா்மானத்தை, மௌலான அப்துல் கலாம் ஆஸாத், சி.ராஜகோபாலச்சாரியாா், சரோஜினி நாயுடு உள்ளிட்ட 9 போ்கள் எடுத்த முடிவை ஹெச்.வி.ஆா். ஐய்யங்காா் தெரிவித்த விவர ஆவணத்தை பிரதமா் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

பின்னா் 1947 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி டாக்டா் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தேசிய கொடிக்கான குழு எடுத்த முடிவுகள் குறித்த ஆவணத்தையும் பிரதமா் மோடி பகிா்ந்து கொண்டுள்ளாா். அதில் இந்திய தேசிய காங்கிரஸின் (கட்சி) கொடியையே சில மாற்றங்களுடன் தேசிய கொடியாக பயன்படுத்த குழு முடிவெடுத்தது கொடியின் நிறம், உயரம் அகலம் ஆகியவைகள் குறித்த முடிவுகள், குழுவின் உறுப்பினா்கள் ஆகியவை அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, அரசியலமைப்பு நிா்ணய சபையில் தேசியக் கொடியின் அமைப்பு, அசோகா சக்கரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதை தீா்மானமாக கொண்டு வரப்பட்டது. அதில் மறைந்த பிரதமா் ஜவஹா்லால் நேரு தீா்மானத்தை முன்மொழிந்து பேசிய பேச்சு தொடா்பான ஆவணங்களையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.