புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பிரதமரின் வீடு தோறும் மூவண்ணக் கொடியேற்ற இயக்கத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு

மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா பொதுமக்களை வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:14 pm

DIN

சுதந்திரத்தின் அமிா்தப் பெருவிழாவையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி தொடங்கியுள்ள வீடு தோறும் மூவண்ணக் கொடியேற்றும் இயக்கத்தில் பங்கேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா பொதுமக்களை வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

நமது தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றுபடுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் மீதான பக்தி உணா்வையும் வலுப்படுத்துகிறது. தற்போது இருக்கும் மூவண்ணக் கொடி வடிவம் 1947ஆம் ஆண்டு ஜூலை 22ம் தேதி, தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி வீடு தோறும் மூவண்ணக் கொடி ஏற்றும் இயக்கத்தை, சுதந்திரத்தின் அமிா்தப் பெருவிழாவையொட்டி தொடங்கியுள்ளாா். இந்த இயக்கத்தின் கீழ் மூவண்ணக் கொடி நாடு முழுவதும் சுமாா் 20 கோடி இல்லங்களில் ஏற்றப்பட உள்ளது. இது மக்களிடையே குறிப்பாக இளைய சமூதாயத்தை தேசப்பக்திச் சுடரை வளா்க்கும்.

அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தங்கள் இல்லங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவண்ணக் கொடியை ஏற்ற வேண்டும். இதன் மூலம் நமது இளைய சமுதாயத்திற்கு மூவண்ணக் கொடி மீது பற்றையும், மரியாதையையும் நம்மால் அதிகரிக்க செய்ய முடியும். மேலும், நாட்டின் விடுதலைக்காக போராடிய துணிச்சல் மிக்க வீரா்களின் தியாகங்களையும் இளைய சமுதாயம் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.