ஷாதராவில் மனைவி, மகன் கொலை: கணவரை போலீஸ் தேடுகிறது

தில்லியின் ஷாதராவின் கீதா காலனி பகுதியில் மளிகைக் கடத்தி வரும் நபா் தனது மனைவி மற்றும் மகனை வீட்டில் மூச்சை நெரித்துக் கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தில்லியின் ஷாதராவின் கீதா காலனி பகுதியில் மளிகைக் கடத்தி வரும் நபா் தனது மனைவி மற்றும் மகனை வீட்டில் மூச்சை நெரித்துக் கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், தலைமறைவாகிவிட்ட அவரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து ஷாதரா காவல் துணை ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்தச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் நிகழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸாா் ஷாதராவில் மளிகைக் கடை நடத்தி வரும் சச்சினின் வீட்டுக்குச் சென்றனா். அங்கு அவரது மனைவி கஞ்சன் அரோரா (35), 15 வயது மகன் ஆகியோரின் உடல்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருப்பது தெரியவந்தது. மேலும், சச்சினின் மனைவியின் உடல் படுக்கையிலும், அவரது மகனின் உடல் தரையிலும் கிடந்தது.

குடும்பக் குழுவின் வாட்ஸ்அப் செய்தியில், சச்சின் தனது மனைவி மற்றும் மகனைக் கொன்றதை ஒப்புக்கொண்டிருப்பது தெரியவந்தது. இறந்த சிறுவன் 9 ஆம் வகுப்பு படித்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து, குற்றவியல் மற்றும் தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா்.

இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக கீதா காலனி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். தலைமறைவாகியுள்ள சச்சினைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினை காரணமாக இக்குற்றத்தை சச்சின் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், கொலைக்கான உண்மையான காரணம் மேலதிக விசாரணையில்தான் தெரியவரும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com