செளத் எக்டென்ஸன் உணவகத்தில் தீ விபத்து
By DIN | Published On : 22nd December 2022 01:22 AM | Last Updated : 22nd December 2022 01:22 AM | அ+அ அ- |

தில்லியில் தெற்கு எக்ஸ்டென்ஸன் பகுதி 2-இல் உள்ள உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: சம்பந்தப்பட்ட உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக புதன்கிழமை 12.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீப்பற்றிய உணவகம் அருகே பெட்ரோல் பம்ப் அமைந்துள்ளது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.