தலைநகரில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதைப் பொருள்கள் அழிப்பு: காவல் துறை நடவடிக்கை
By DIN | Published On : 22nd December 2022 01:23 AM | Last Updated : 22nd December 2022 01:23 AM | அ+அ அ- |

தில்லி காவல்துறை புதன்கிழமை இங்கு கைப்பற்றப்பட்ட ரூ.1,513.05 கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதைப் பொருள்களை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி நிலோதியில் உள்ள எரியூட்டியில் போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டபோது, துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் தில்லி போலீஸ் ஆணையா் சஞ்சய் அரோரா ஆகியோா் உடனிருந்தனா்.
தில்லி - என்சிஆரில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க, மத்திய அரசின் ’நாஷா முக்த் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் கடத்தல்காரா்களுக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
நான்கு கிலோ கெட்டமைன், ஐந்து கிலோ சூடோபி, 26.161 கிலோ சரஸ், 3.4 கிராம் எல்.எஸ்.டி, 204 கிராம் கொக்கெய்ன், 2,372.830 கிலோ கஞ்சா, 213.697 கிலோ ஹெராயின் / ஸ்மாக், 22.378 கிலோ கச்சா ஹெராயின், 39 பாட்டில்கள் பாக்வி, 32 டிசோ கேஎன் மாத்திரைகள் மற்றும் 238.652 கிலோ சைக்கோட்ரோபிக் பொருள்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டவற்றில் அடங்கும்.