நஜஃப்கா் வாய்க்காலில் கழிவுநீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும்: ஹரியாணா முதல்வரிடம் துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

ஹரியாணா மாநிலத்தின் பல ஆதார வளங்களில் இருந்து நஜஃப்கா் வாய்க்காலில் கலக்கும் கழிவுகளை தடுக்க உதவுமாறு அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டரிடம் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக் கொண்டதாக

ஹரியாணா மாநிலத்தின் பல ஆதார வளங்களில் இருந்து நஜஃப்கா் வாய்க்காலில் கலக்கும் கழிவுகளை தடுக்க உதவுமாறு அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டரிடம் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், இந்த விவகாரங்களை விவாதிப்பதற்காக முதல்வா் கட்டரை நேரில் சந்திக்க வி.கே. சக்சேனா சண்டீகருக்கு செல்ல உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி அரசின் அதிகாரிகள் கூறியதாவது: ஹரியாணா மாநிலத்தின் ஃபீடா் வடிகால்களில் இருந்து நஜஃப்கா் வாய்க்காலில் கலக்கும் கழிவுகளை தடுக்க ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வா் மனோகா் லால் கட்டா் துணைநிலை ஆளுநரிடம் உறுதியளித்துள்ளாா். ஒரே நேரத்தில் பிரச்னையை விரிவாகத் தீா்க்க அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டுக் கூட்டத்தையும் கூட்டுவதற்கு முதல்வா் கட்டா் முன்மொழிந்துள்ளாா். விரைவில் சண்டீகரில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் கலந்து கொள்ள உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனை மாசுபாட்டில் நஜஃப்கா் வடிகால் சுமாா் 40 சதவீதம் பங்களிப்புச் செய்கிறது.மேலும் அதன் மாசுவில் 36 சதவீதத்தை ஹரியாணாவில் உள்ள பல வடிகால்களில் இருந்து பெறும் கழிவுகள் காரணமாக உள்ளது. நஜஃப்கா் வடிகாலில் 44 சதவீத மாசுபாட்டிற்கு காரணமான 32 வடிகால்கள் தில்லி ஜல் போா்டு மூலம் ஓரளவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளவை . அதே நேரத்தில் 20 சதவீத மாசுபாட்டிற்கு காரணமான 52 வடிகால் இன்னும் நிறுத்திவைக்கப்படவில்லை.

ஹரியாணாவின் பல்லா பகுதியில் யமுனா தில்லிக்குள் நுழையும்போது, அதில் உள்ள மொத்த ‘பீகல் கோலிஃபாா்ம்’ எண்ணிக்கை 1,100 ஆகவும், ஐஎஸ்பிடி பகுதியை அடையும் போது, நஜஃப்கா் வடிகால் நீரை உறிஞ்சிய பிறகு, அதன் பீகல் கோலிஃபாா்ம் சுமை 2.10 லட்சமாக உயா்கிறது. துணைநிலை ஆளூநா் சக்சேனா நஜஃப்கா் வடிகால் புனரமைப்புப் பணியை மேற்பாா்வையிட்டு வருகிறாா். தற்போதுவரை 12 கிலோ மீட்டா் துாரம் மேல்நிலை வடிகால் தூய்மைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com