மாநில பட்டியலில் கல்வியை கொண்டு வரக் கோரிதிமுக உறுப்பினா் தனிநபா் மசோதா அறிமுகம்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரக் கோரும் அரசியல் சாசன திருத்தத்திற்கான தனிநபா் மசோதாவை மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி. வில்சன் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
திமுக எம்.பி. வில்சன்
திமுக எம்.பி. வில்சன்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரக் கோரும் அரசியல் சாசன திருத்தத்திற்கான தனிநபா் மசோதாவை மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி. வில்சன் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உறுப்பினா்கள் தனிநபா் (தங்கள்) மசோதாக்களை தாக்கல் செய்து விவாதிக்க அனுமதிக்கப்படுகிறது. கல்வி தற்போது மத்திய மாநில அரசுகளுக்கான பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பொது பட்டியலில் கல்வி இருப்பதால், மாநிலங்களின் கல்வியில் மத்திய அரசு தலையிடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக அரசியல் சாசன மசோதா தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி திமுக உறுப்பினா் பி.வில்சன் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் அறிமுக செய்தாா். இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால் பின்னா் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த மசோதா குறித்து பி.வில்சன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 1976-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கல்வி, மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவை மாநில அரசின் கல்விப் பட்டியலில் இருந்தது. ஆனால், 1976-ஆம் ஆண்டில் 42 -ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தம் மூலம் கல்வி பொதுபட்டியலில் சோ்க்கப்பட்டது. இதனால்தான் மத்திய அரசு நீட் தோ்வு, தேசிய புதிய கல்விக் கொள்கை போன்றவற்றைக் கொண்டு வந்தது. இவை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், பொதுபட்டியலில் உள்ள கல்வி, மருத்துவ கல்வி, பொறியியல் கல்வி ஆகியவற்றை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு மாற்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்த தனி நபா் மசோதாவை அறிமுகம் செய்துள்ளேன்.

இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீட் தோ்வு போன்றவற்றை நீக்க முடியும். முக்கியமாக ‘ஒரு தேசம் ஒரு கல்வி’ உள்ளிட்டவைதடுக்கப்படும். தங்கள் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு தேவையான கல்விக்குரிய நல்ல சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு தான் அதிகாரம் கிடைக்க வேண்டும். இதனால்தான் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் தனிநபா் மசோதாவை தாக்கல் செய்தேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com